கேளிக்கை

12 வருடத்திற்குப் பிறகு விஜய்யுடன் மோதும் சரத்குமார்…



விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படமும், சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘மெர்சல்’. அட்லி இயக்கியுள்ள இப்படம் தீபாவளிக்கு உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. அதேதினத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சென்னையில் ஒரு நாள் 2’ படம் வெளியாக இருக்கிறது. முதல் பாகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் இரண்டாக பாகத்திற்கும் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு விஜய் படமும், சரத்குமார் படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.

இதற்கு முன் 2005ம் ஆண்டும் விஜய் நடிப்பில் உருவான ‘திருப்பாச்சி’ படமும், சரத்குமாரின் ‘ஐயா’ படமும் பொங்கல் திருநாளில் வெளியாகி இருக்கிறது.

12 வருடத்திற்குப் பிறகு தீபாவளி தினத்தில் விஜய்யின் ‘மெர்சல்’ படமும், சரத்குமாரின் ‘சென்னையில் ஒருநாள் 2’ படமும் ஒரே நாளில் வெளியாகிறது.

Related posts

பிரபல மொடல் கிம் அமெரிக்க சிறையில்…

wpengine

24 வருடங்களுக்குப்பின் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வரும் அஜித் படம்

wpengine

முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தொகுப்பாளினி ரம்யா…

wpengine