உள்நாட்டு செய்திகள்

11 பேருடன் பயணித்த மீன்பிடி படகொன்று விபத்து…


அம்பலாந்தோட்டை மீனவ துறைமுகத்தில் இருந்து 11 பேருடன் பயணித்த மீன்பிடி படகொன்று ஹிக்கடுவைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் கடற்படையினரும் இணைந்து அந்த படகை தேடி வருவதோடு, தேடுதல் பணியில் விமானப் படையின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

படகில் பயணித்த மீனவர்கள் நேற்று(19) மாலை தமது உறவினர்களுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அழைத்து, தாம் அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக தெரியப்படுத்தியுள்ள நிலையில் இரவு 9.00 மணிக்கு பின்னர் அவர்களுடனான தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

கந்தக்காடு : பார்வையாளர்கள் எவருக்கும் தொற்று இல்லை

wpengine

பயங்கரவாதம் : விசேட வர்த்தமானி வெளியீடு

wpengine

30 ஆண்டுகள் வளர்ச்சியை கொண்டாடிய Whiteline Industries

Azeem Kilabdeen