Top Story 2உள்நாட்டு செய்திகள்

தாதியர்களுக்கு தீர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச சேவைக்கான ஐக்கிய தாதியர் சங்கத்தின் 7 கோரிக்கைகளில் 05 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய இரண்டு கோரிக்கைகளையும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது நிறைவேற்றவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அரச சேவைக்கான ஐக்கிய தாதியர் சங்கத்துடன் நேற்று(02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது ஜனாதிபதியால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி,

01. தாதியர் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல்

02. நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2017. 12. 07ஆம் திகதிய 32/2017ஆம் இலக்க சுற்றுநிரூபத்தின் ஊடாக இடைநிறுத்தப்பட்ட பணிக்குழாம் நிலையை மீண்டும் வழங்குதல்

03. இடைநிறுத்தப்பட்டுள்ள வகுப்பு iii இலிருந்து வகுப்பு iiக்கு பதவி உயர்வை ஐந்தாண்டுகளிலும் மற்றும் வகுப்பு ii இலிருந்து வகுப்பு iக்கு ஏழு ஆண்டுகளிலும் தரம் உயர்த்துதல்

04. ரூ .20,000 வருடாந்த சீருடைக் கொடுப்பனவை வழங்குதல்

05. தற்போதைய 36 மணிநேர வேலை நேரத்தை வாரத்துக்கு ஐந்து நாட்கள் (30 மணிநேரம்) நேரமாகக் கருதுவதை விசேட குழுவொன்றின் ஆய்வுக்கு உட்படுத்தல்

ஆகிய ஐந்து விடயங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

ரூ .10,000 கொடுப்பனவு மற்றும் 2014.12.24 ஆம் திகதியன்று நிதி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை சம்பளத்தின் 1/100 மேலதிக சேவைக் கொடுப்பனவு ஆகியவற்றை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்க, ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.

அதன்படி, அரச சேவை செவிலியர் சங்கம் முன்வைத்த ஏழு கோரிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

அரச சுகாதாரத் துறை மீது அரசாங்கத்துக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும் தாதியர் சேவைக்கு கூடிய அங்கீகாரத்தை அளிப்பதாகவும், தாதித் தொழில் வல்லுநர்களுக்கு உரிய இடத்தை வழங்குவதாகவும், ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Related posts

ரஞ்சித் சஜித் கூட்டணியின் கீழ் தேர்தலுக்கு

wpengine

பொருளாதார மையங்களை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம் – இந்திய தூதுவரின் வருகைக்கு எதிர்ப்பு…!

wpengine

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 இலட்சம் பேர் வெளியேற்றப்படுவர்..

wpengine