உள்நாட்டு செய்திகள்

100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும்



(FASTNEWS|COLOMBO) – மேல், தென், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

விசேடமாக தென் மாகாணத்திலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் ஓரளவான கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்கும் திட்டத்திற்கு ஜே.வி.பி எதிர்ப்பு

wpengine

ஆசிரியர்களுக்கு ரூ.5000 மேலதிக கொடுப்பனவு

wpengine

எசல பெரஹெர ஆகஸ்ட் 02 ஆம் திகதி ஆரம்பம்

wpengine