ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

10 வருடங்களுக்கு மேலாக மனைவியின் சடலத்துடன் உறங்கும் கணவன்



காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் கல்லறைக்கூட காதலைத் தடுக்க முடியாது என்று காண்பித்திருக்கிறார், வியட்நாமைச் சேர்ந்த இந்த விசித்திர மனிதர். காதலியோ, மனைவியோ இறந்துவிட்டால் அவள் நினைவுகளுடனும், நிழற்படங்களும் வாழ்க்கை நடத்துகிற காதல் நாயகர்களைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இறந்து போன மனைவியின் சடலத்தைத் தோண்டி எடுத்து, அதை பொம்மையாகச் செய்து, அதனுடனேயே தன் முழு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டுகொண்டிருக்கிறார், 55 வயதான திரு.லீ வான். வியட்நாமிலுள்ள, ’க்வாங் நாம்’ பிரதேசத்தைச் சேர்ந்த இவர், 2003ல் தன் மனைவியை இழந்த சோகம் தாளாமல், தினந்தோறும் மனைவியின் கல்லறையைக் கட்டித் தழுவியபடியே உறங்கி வந்திருக்கிறார் லீ வான். சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து, தன் மனைவிக்கும் தனக்கும் இடையே கல்லறைத் தடுப்பாய் இருப்பதாக உணர்ந்த லீ வான், கல்லறையின் பக்கவாட்டில் ஒரு சுரங்கம் போல் தோண்டி உள்ளே சென்று உறங்கப்போவதாகக் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரைத் தடுத்துள்ளனர். ”அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்” என்பதற்கிணங்க, நவம்பர், 2004 ல் தன் மனைவியின் கல்லறையைத் தோண்டி, சடலத்தை வெளிக்கொணர்ந்தார், லீ. அச்சடலத்தின் மீதமிருந்த உறுப்புகளையெல்லாம் ஒன்றுதிரட்டி அவற்றின் மேல் நெகிழிப் பொம்மையைப் போல் ஒரு சட்டம் அடித்து அதைத் தைத்த லீ, அந்த பொம்மைக்கு தன் மனைவியின் உடைகளை அணிவித்து, தன் படுக்கையில் கிடத்திவைத்திருக்கிறார்.

மேலும் ஒரு அழகிய பெண் பொம்மையின் முகமூடியையும் அந்தச் சடலக்குவியலாலான பொம்மைக்கு அணிவித்த லீ, 2004ம் ஆண்டிலிருந்து இன்று வரை அந்தப் பொம்மையைக் கட்டிப் பிடித்தவாறே உறங்குகிறார் லீ வான். இது குறித்து, வியட்நாமிலுள்ள நாளிதழான ‘லா ஒ டாங்’, லீ வானை அணுகியபோது அவர், “நான் வித்தியாசமானவன்; மற்றவர்களைப்போல் எதையும் செய்ய மாட்டேன். என் மனைவியின் உடல் மட்டுமே இறந்துபட்டது. அவர் ஆன்மா எங்களுடன் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. எனவே அவளது சடலத்துடன் வாழ்வதில் எனக்கு எந்த பயமுமில்லை.” என்று அந்த பொம்மையைத் தழுவியபடி பேட்டி அளித்திருக்கிறார் காதலுக்கு கண்ணில்லை என்றாலும், காற்றுக்கு மாசு அபாயம் உண்டென்பதால், இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்போவதாக, ‘க்வாங் நாம்’ சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Related posts

மஹிந்தவை தோற்கடித்த பசில் மீண்டும் குழப்பம்

wpengine

அநுர திசாநாயக்கவே ஜனாதிபதி – ரணிலின் புதிய துரும்பு

wpengine

பிரபல பாடகர் மிகா சிங் கைது

wpengine