ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

1 நிமிடத்தில் உலகம் 61 விநாடிகளை சந்திக்கப் போகின்றது!!!



ஜூன் மாதம் 30ம் திகதி கிறீன்விச் இடைநிலை நேரம் 23.59ல் உலகம் ஒரு நிமிடத்தில் 61 விநாடிகளை உணரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வித்தியாசமான நிகழ்வு லீப் விநாடி என அழைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அறிவியல் அடிப்படையில் ஒரு விநாடி சேர்ப்பது பிரச்சினையானது. இந்த லீப் விநாடியை வைத்திருப்பதா அல்லது அகற்றி விடுவதா என பல விவாதங்கள் இடம்பெற்றுள்ளது.

பூமியின் சுழற்சி மற்றும் குறிப்புதவி அமைப்புக்களின் சர்வதேச அமைப்பின் அங்கத்தவர் டானியல் காம்பிஸ் ஒரு விநாடியை சேர்ப்பது உலக கணனியை பாதிக்கும் என கருதுகின்றார்.

2012 ஜூன் 30-ல் மிக அண்மித்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. அச்சமயம் பல கணனி பிணையங்கள் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

எடுத்துக்காட்டாக அவுஸ்ரேலியாவின் Qantas விமான நிறுவனங்களின் ஆன்லைன் முன்பதிவு அமைப்புக்கள் பல மணித்தியாலங்கள் செயலிழந்திருந்ததாக காம்பிஸ் தெரிவித்துள்ளார்.

இதே போன்ற சிறு சிறு தடங்கல்கள் வேறு வேறு துறைகளிலும் ஏற்பட்டு அவை சரியாக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இன்றிலிருந்து பத்தாயிரம் ஆண்டுகளின் பின்னர் நேரம் தலைகீழாக மாறும்.இதற்கிடையில் சூரிய உதயத்தை நடு இரவில் காணக்கூடியதாகவும் காலை சிற்றுண்டியை அதிகாலை 2மணிக்கு பெறக்கூடியதாகவும் இருக்கும்.

Related posts

சார் ‘FAIL’

wpengine

முஸ்லிம்களுக்கு எதிராக facebook இல் பதிவிட்ட பதிவினைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் மகனின் fb முடங்கியது..

wpengine

நாமல் சீல் பெற்ற விதம் இப்படித்தான் (PHOTOS)

wpengine

4 comments

nifraz razan Jun 23, 2015 at 11:05 am

எல்லாமே புதுசு புதுசா இருக்கின்றது

shan mazeen Jun 23, 2015 at 11:07 am

உலகம் அழிவுஆரம்பம்

imtiyaz Jun 23, 2015 at 11:12 am

அப்போ எப்ப நீங்க ரெடியா

buhari Jun 23, 2015 at 11:13 am

அப்போ அந்த 40 வருடம்

Comments are closed.