ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

07 தடவைகள் துபாய் பயணம் – மதூஷ் தொடர்பில் நாமல் அம்பலம்.. (PHOTOS)



ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்ய 07 தடவைகள் டுபாய் சென்ற இலங்கை அரசாங்கம், மாகந்துரே மதூஷை கைது செய்ய ஒரு தடவையேனும் டுபாய்க்கு செல்லவில்லையென குறிப்பிட்டு, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று(14) தனது டுவிட்டரில் பதிவினை பதிவிட்டுள்ளார்.

சிறைச்சாலை பேரூந்து மீது தாக்குதல் நடத்தி சமயங் என்ற பாதாள குழுவின் தலைவர், பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகி​யோர் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட பின்னர் மதுஷை கைது செய்வதற்கு சிவப்பு அறிவித்தலை விடுப்பதற்கனான வாய்ப்புகள் இருந்த போதிலும் எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

எனினும் மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தின் பின்னர், அரசாங்கம் செயற்பட்ட விதத்தைப் போலவே, அதற்கு பின்னரான நடவடிக்ககைகளிலும் அரசாங்கம் செயற்பட்டுள்ளது என நாமல் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் மதுஷைக் கைது செய்வது தொடர்பில், உண்மைத் தகவல்களை மறைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

15 ஆண்டுகளுக்கு பின்னர் செவ்வாய்க் கிரகம் பூமியை அண்மித்து பயணிக்கிறது…

wpengine

என்னை கொலை செய்ய திட்டம், ரோ புலனாய்வின் திட்டம் மோடிக்கு தெரியாது.. – மைத்திரி…

wpengine

நாமல் – லிமினியின் முதல் பயணத்திலேயே சீனச் சாகசங்கள் [VIDEO]

wpengine