உள்நாட்டு செய்திகள்

04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…


இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் கொழும்பின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிட்ட ஆகிய பகுதிகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, எஹலியகொட ஆகிய பகுதிகளுக்கும் பூரண மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, இங்கிரிய மற்றும் ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க மற்றும் சீதாவக்க ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அனுமதியற்ற விற்பனை நிலையங்களை அகற்ற நடவடிக்கை…

wpengine

வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இன்று..

wpengine

ஶ்ரீ.சு.கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர்

wpengine