ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

03 வருடங்கள் கழித்து பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் யாழ் நோக்கி மஹிந்த…



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மூன்று ஆண்டுகளுக்குப்பின் இன்று(01) யாழ்ப்பாணம் நோக்கி செல்லவுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வீரசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே இன்று யாழ் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின் மஹிந்த ராஜபக்ஷ வடக்கிற்கு செல்லவில்லை. இந்நிலையில் 3 வருடங்கள் கழித்து தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ். செல்கின்றார்.

மஹிந்தவின் யாழ். வருகையை முன்னிட்டு வீரசிங்க மண்டபத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

 

#g-reeshma

Related posts

‘சாரா’ நாடகம் அரங்கேறுகிறதா?

wpengine

மூட நம்பிக்கையால் விமானத்தைத் தாமதப்படுத்திய பெண்மணி!

wpengine

கண்டதில் கிளிக் ஆனது [ PHOTO]

wpengine