உள்நாட்டு செய்திகள்

ஹோமாகம நீதிமன்றத்தில் குழப்பம் விளைவித்தமை தொடர்பில் பிக்குமார் மூன்று பேர் கைது



ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்குள் நுழைந்து குழப்பம் விளைவித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகவிலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், நீதிமன்றத்திற்குள் வந்து, நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில வைக்கப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவு வழங்கப்பட்ட கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்திற்கு எதிரிலும் உள்ளேயும் நுழைந்த பிக்குமார் உள்ளிட்ட சிலர் அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு ஹோமாகம நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இதனடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நிசாம் காரியப்பர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம்

wpengine

இந்திய தொழிலதிபரை மிரட்டி 200 கோடி பறித்த இலங்கை நடிகை!

wpengine

லசந்த விக்கிரமதுங்க கொலை குறித்து கோட்டபயவிடம் விசாரணை…

wpengine