உள்நாட்டு செய்திகள்

ஹொரணை – இறப்பர் தொழிற்சாலை உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல்…



ஹொரணை – பெல்லபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் விளக்கமறியலில் இருந்த இருவரையும்  எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க இன்று(27)  ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

 

++++++++++++++++++++++++++++++++  UPDATE  11:07 PM

ஹொரணை – இறப்பர் தொழிற்சாலை உரிமையாளர் நீதிமன்றில் சரண்…

ஹொரணை – பெல்லபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலை உரிமையாளர் சட்டத்தரணி ஊடாக சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி குறித்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விச வாயு கசிவினால் 05 பேர் உயிரிழந்திருந்தனர்.

குறித்த அனர்த்தம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த தொழிற்சாலையின் முகாமையாளர் மற்றும் இரசாயண பகுப்பாய்வு பிரிவின் கட்டுப்பாட்டாளர் தொடர்பான வழக்கு இன்று(27) ஹொரணை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

 

Rizmira

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 24,374 பேருக்கு தடுப்பூசிகள்

wpengine

இரண்டாவது நாளாகவும் பங்குச் சந்தையில் வளர்ச்சி

wpengine

இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இன்று(14) ஆரம்பம்…

wpengine