உலக செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் 4 அமெரிக்கர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு…



(FASTNEWS-KENYA) கென்யாவின் துர்கானா ஏரியின் மத்தியில் உள்ள தேசிய பூங்காவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் அமெரிக்காவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கென்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள துர்கானா எரியின் நடுவில் அமைந்துள்ள தீவில் உள்ள தேசிய பூங்காவை சுற்றிப் பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

ஹெலிகாப்டர்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை இரண்டு ஹெலிகாப்டர்களில் தேசிய பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்பட்டனர். அதில் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது, தரையில் மோதி விபத்துக்குள்ளானதில், அமெரிக்காவைச் சேர்ந்த 4 பேரும், கென்யாவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் விமணியும் உயிரிழந் துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா விஜயம்

wpengine

கடும் மழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

wpengine

அமெரிக்க உளவுத்துறை அமைப்பின் தலைமை அதிகாரி இராஜினாமா

wpengine