உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதைப் பொருள் குற்றச்சாட்டில் பிரபல பாடகரின் விளக்கமறியல் நீடிப்பு



ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடகர் செஹான் பெரேராவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கங்கொடவில மாஜிஸ்திரேட் நீதிமன்றம் செஹான் பெரேராவை எதிர்வரும் 27ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று உத்தரவிட்டுள்ளது.

மஹரகம பொலிஸார் நேற்று முன்தினம் பாடகர் செஹான் பெரேராவை கைது செய்திருந்தனர்.

மஹரகம, பெரகும் மாவத்தையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ரேனுகா சமந்தி எனப்படும் ரேனு என்பவரிடமிருந்து 555 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை ரூபா 25,000 செலுத்தி பெற்றுக் கொண்டு, அதனை எடுத்துச் செல்லும் வழியில் பாடகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செஹான் பெரேராவிடம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் போதைப் பொருள் விற்பனை செய்த ரேனு என்ற பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தப்பெண் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண்ணை எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

Related posts

மேலும் 288 பேர் தாயகத்திற்கு

wpengine

தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் மே தின செய்தி…

wpengine

மருதானை பிரதேசத்தில் சுமார் 2000 பேர் தனிமைப்படுத்தலுக்கு

wpengine