உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…



(FASTNEWS|COLOMBO) மட்டக்குளிய, சமித்புர பிரதேசத்தில் 504 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளிய பொலிஸ நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

55 வயதுடைய மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று(15) மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், மட்டக்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

எல்ல காட்டுப் பகுதியில் தீ

wpengine

இன்று மற்றும் நாளை மழையுடன் கூடிய காலநிலை..

wpengine

கொரோனா தொற்றினால் மேலும் 2 பேர் உயிரிழப்பு

wpengine