உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதைபொருளுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது…


ஹெரோயின் போதைபொருளுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் அங்குலன மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

15 கிராமும் 740 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் அங்குலான சயுரபுர அடுக்குமாடி வீட்டுத் தொகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை 15 கிராமும் 120 மில்லி கிராம் ஹெரோயினுடன் வெல்லம்பிட்டிய, வதுல்லவத்தை பிரதேசத்தில் வைத்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பில் 25 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

Related posts

14 வயதுச் சிறுமி தூக்கிட்டு தற்கொலை

News Editor

ஸ்ரீ.சு.கட்சியின் 23பேர் கொண்ட குழு மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு…

wpengine

வடமேல் மாகாண வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு…

wpengine