உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் கடத்தலில் ஈடுபடும் குழுவொன்று மீது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு….


வௌ்ளவத்தை பிரதேசத்தில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபடும் குழுவொன்று மீது பொலிஸாரால் நேற்றிரவு 11.40 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வௌ்ளவத்தை சாலிமன்ட் வீதி பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால் கார் ஒன்றில் ஹெரோயின் வர்த்தகம் மற்றும் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக வௌ்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி பொலிஸ் குழுவொன்று அங்கு சென்றுள்ளது.

இதன்போது பொலிஸார் கார் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டினால் காரில் இருந்த பிரதான சந்தேகநபர் காயமேற்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹெட்டியாரச்சிகே கமல் அபேரத்ன என்ற 39 வயதுடைய சந்தேக நபரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

சந்தேகநபர் ஏற்கனவே ஹெரோயின் வைத்திருந்த மற்றும் விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது.

சம்பவத்தின் போது காரில் இரண்டு பெண்கள் இருந்துள்ளதுடன், காரின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு ஜனாதிபதியின் இணக்கத்துடன் மீண்டும் பதவி நியமனம்…

wpengine

அரசியலமைப்பு பேரவைக்கு எதிர்வரும் வாரத்தில் புதிய உறுப்பினர்கள் நியமனம்…

wpengine

மாத்தறை மாவட்டம்

wpengine