உள்நாட்டு செய்திகள்

பாலியல் முறைப்பாடு – 3 பொலிசார் பணி இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யுவதியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக கிடைப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காமை காரணமாக ஹெம்மாதகமை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் ஆகியோரே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த யுவதி, அவருடன் பயணித்த இளைஞனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஹெம்மாதகமை பொலிஸ் நிலையத்தில் குறித்த யுவதியின் தந்தை முறைப்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டினை முடக்கம் செய்ய எவ்வித தேவையும் இல்லை

wpengine

புதிய அரசின் கொள்கைப் பிரகடனம் வியாழனன்று

wpengine

யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில்

wpengine