உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹிருணிகாவின் கைது தொடர்பில் பொலிஸார் அறிவிக்கவில்லை – சபாநாயகர்



நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்ய வேண்டிய தேவை இருப்பதாக பொலிஸார் இதுவரையில் தமக்கு அறிவிக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்னும் ஹிருணிகா பிரேமசந்திர தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாக பொலிஸார் எனக்கு அறிவித்துள்ளனர்.

அண்மையில் தெமட்டகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் ஹிருணிகாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. எனினும் ஹிருணிகாவை கைது செய்ய வேண்டிய தேவை குறித்து இதுவரையில் அறிவிக்கவில்லை.

பொலிஸார் முழு அளவிலான சுயாதீனத்தன்மையுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு என சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹிருணிகா கைது செய்யப்படுவாரா அது குறித்து பொலிஸார் அறிவித்தனரா ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்யும் போது அது குறித்து சபாநாயகருக்கு அறிவிப்பது ஒர் மரபாக காணப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

தரமற்ற வாகனங்கள் பிரவேசிக்க அனுமதியில்லை…

wpengine

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக ப்லவர் வீதிப் பகுதியில் கடும் வாகன நெரிசல்

wpengine

உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை இரு வருடங்களுக்கு நீடிக்கும் – மத்திய வங்கி

wpengine