கேளிக்கை

ஹாக்கி உலகக் கோப்பை – ரஹ்மான் இயக்கத்தில் ஷாருக்கான்…


ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையை பிரபலப்படுத்த உருவாக்கப்பட்ட பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இயக்க, ஷாருக்கான் நடித்திருக்கிறார்.

ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் 28-ம் திகதி ஒரிசா மாநிலம் புவனேஷ்வரில் ஆரம்பமாகவுள்ளது.

ஒடிசாவில் ஹாக்கி உலகக்கோப்பை நடப்பதைப் பிரபலயப்படுத்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் ஒன்றை வெளியிட ஒரிசா அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹிந்திப் பாடலாசிரியர் குல்சார் பாடல் வரிகளில் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடலுக்கான இசை வீடியோவை ரஹ்மானே இயக்குகிறார்.

‘ஜெய் ஹிந்த் ஜெய் இந்தியா’ எனத் தொடங்கும் பாடலில் ஹிந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு புவனேஷ்வரில் சமீபத்தில் நடந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கத்தில் நடித்ததை மகிழ்வாகப் பகிர்ந்து வருகிறார் ஷாருக்கான்.

Related posts

ஐதராபாத்தில் விஷால் – அனிஷா நிச்சயதார்த்தம்…

wpengine

கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கவுள்ள சர்தார்

wpengine

துருவ் விக்ரமின் அடுத்த படம்

wpengine