உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஹற்றன்-கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.



ஹற்றன்-கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் பாதையின் ஒரு பகுதி கீழிறங்கியுள்ளதால் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் குறித்த வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இங்கு பெய்து வரும் அடை மழைக் காரணமாக குறித்த பாதையில் நீர் வழிந்தோடும் ஓடையின் பாதுகாப்பு கற்கள் சரிந்து விழுந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே பாதை தாழிறங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடயம் தொடர்பாக வட்டவளை பொலிஸார் நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

யுத்த வெற்றிக்காக அர்ப்பணிப்பு செய்த இராணுவ வீரர்களை நினைவு கூருவது அவசியமே…

wpengine

சமன் திஸாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்களது விளக்கமறியல் நீடிப்பு

wpengine

பாடசாலை மாணவர்களுக்கு Pfizer தடுப்பூசி

wpengine