உள்நாட்டு செய்திகள்

ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்ட விவகாரம் – நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு பிணை..



பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, டி.வி.சானக்க, மாகாண சபை உறுப்பினர்களான சம்பத் அதுகோரல உள்ளிட்ட எட்டுப் பேருக்கு இன்று(16) நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த 10ஆம் திகதி, வாக்குமூலம் வழங்குவதற்காக ஹம்பாந்தோட்டை பொலிஸ் தலைமையகத்திற்கு சென்ற வேளை கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மத்தள வானூர்தி நிலையத்தை நீண்ட காலம் குத்தகை முறையில் இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் முன்னால், கடந்த 6ஆம் திகதி எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில், இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

 

(rizmira)

Related posts

முன்னாள் பாதாள குழுவின் தலைவர் தெல் பாலாவின்(Thel Bala) உடலம் இலங்கைக்கு….

wpengine

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்….

wpengine

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஞானசார தேரர் ஜப்பான் பயணிக்கவில்லை – ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கை…

wpengine