உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் ஒப்பந்தத்தை கைவிடுமாறு ஜனாதிபதிக்கு ஜேவிபி கடிதம்…



ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் ஒப்பந்தத்தை கைவிடுமாறு ஜனாதிபதியிடம் கோரி இருப்பதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விவரமான கடிதம் ஒன்றினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் குறித்த இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பாந்தோட்டையில் எதிர்வரும் 7ம் திகதி வரையில் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுவதாக, திஸ்ஸமஹாராம – லுனகம்வெஹெர ஒன்றிணைந்த பிக்குகள் ஒழுங்கமைப்பு அறிவித்துள்ளது.

அத்துடன் துறைமுகத்துக்கு அருகில் எதிர்வரும் 7ம் திகதி சத்தியாகிரக போராட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாகவும் பிக்குகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் இந்த திட்டத்துக்கு எதிராக மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

மருந்துகளுக்கான நிர்ணய விலை தொடர்பான அறிக்கை வெளியிடப்படும் – அமைச்சர் ராஜித

wpengine

பாராளுமன்ற தெரிவுக் குழு ஐந்திற்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்…

wpengine

தலைமையில் இருந்து ரணில் விலகல்

wpengine