உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹம்பாந்தோட்டை சம்பவம் குறித்து சமல் மற்றும் நாமல் பதிலளிக்கிறார்…



ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று(07) இடம்பெற்ற பதற்ற நிலைமைக்கு முழுக் காரணமும் கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களின் நடவடிக்கைகளே என பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் கொழும்பிலிருந்து வராது போனால், இப்பிரச்சினை அவ்வளவு தூரம் பாரதூரமாக இருந்திருக்காது எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றம் தடை விதித்திருந்த பிரதேசங்களுக்கு செல்லவில்லை. நீதிமன்றத்தை மதித்து நடாத்திய ஆர்ப்பாட்டத்துக்கே பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டனர்.

அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கு, அரசாங்கம் பொலிஸாரை வைத்து தாக்குதல் மூலம் பதிலளிப்பதாகவும் சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசேட அறிவித்தல்..

wpengine

நாளை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

wpengine

தயாசிறி CID இற்கு வருகை…

wpengine