உள்நாட்டு செய்திகள்

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்ட விவகாரம் – விசாரணைகள் இன்று ஆரம்பம்..



ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸ் பொறுப்பில் இருந்த நபரை, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு இன்று(16) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, மூவர் அடங்கிய குழுவொன்று நேற்று(15) ஹம்பாந்தோட்டை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

மேலும், இவர்கள் ஒரு வாரம் அளவில் அங்கு தங்கியிருந்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த குழுவின் அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும்.

 

(rizmira)

Related posts

தெரணியகலையில் இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது…

wpengine

உள்ளூராட்சி தேர்தலில் மேர்வின் போட்டியிடும் வாய்ப்பு

wpengine

ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு

wpengine