உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழுவொன்று நியமிப்பு…



ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை, சீன நிறுவனமொன்றுக்குக் கையளிப்பது தொடர்பான ஒப்பந்தம் குறித்து ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சரவை உபகுழு ஒன்று நியமித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை, சீன நிறுவனமொன்றுக்குக் கையளிப்பது தொடர்பான குறித்த ஒப்பந்தம் திருத்தப்பட்ட நிலையில், நேற்று(21) அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்பட்டபோதே, அமைச்சரவையின் விசேட அனுமதியுடன் அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள், அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் துறைமுக விவகார அமைச்சரின் தரப்பு என்ற மூன்று தரப்புகளிடமிருந்தும், நாட்டிற்கு நன்மை பயக்கும் விதத்தில் தீர்மானங்களை முன்வைக்குமாறும் குறித்த உபகுழுவுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

சுசில் பிரேமஜயந்த, பாட்டளி சம்பிக்க ரணவக்க, சரத் அமுனுகம, அர்ஜுன ரணதுங்க ஆகிய அமைச்சர்களது பிரதிநிதித்துவத்துடன் குழு கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்..

wpengine

அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு பகுதி மூடப்படும்

wpengine

வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்கு தீர்வு…

wpengine