Top Story 1உள்நாட்டு செய்திகள்

விமான விபத்து – இரசாயன பகுப்பாய்வு குழு ஆராய்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | ஹப்புத்தளை) – ஹப்புத்தளையில் நேற்று(03) இடம்பெற்ற வான்படைக்கு சொந்தமான விமானமொன்று விபத்திற்குள்ளான சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக இரசாயன பகுப்பாய்வு குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது.

அதனுடன் விபத்தில் உயிரிழந்த விமான படை வீரர்கள் நால்வரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று(04) இடம்பெறவுள்ளன.

இலங்கை வான்படைக்கு சொந்தமான வை – 12 ரக விமானம் நேற்று காலை ஹம்பாந்தோட்டை, வீரவில விமான தளத்தில் இருந்து கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பயணித்த வேளையிலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

இதேவேளை, விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறியும் வகையில், வான்படை தளபதியின் பணிப்புரைக்கு அமைய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் புதியதொரு செயலி

wpengine

சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம் விரைவில்

Azeem Kilabdeen

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் நவவியின் இடத்துக்கு முஹம்மட் இஸ்மாயில்…

wpengine