உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஹபீஸின் இடத்திற்கு எம்.ஷரீப் தௌபீக்



அண்மையில் பதவியை இராஜினாமா செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸின் இடத்திற்கு எம்.ஷரீப் தௌபீக் (M.Sharif Thowfeek) தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 19ம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் இந்த முடிவை எடுத்ததாக பின்னர் அறித்தமை குறிப்பிடத்தக்கது.

சில மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் இல்லாமையால், அந்தப் பகுதிகளிலுள்ளவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் பொருட்டே தான் சொந்த விருப்பத்தின் பேரில் இராஜினாமா செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடாளாவிய ரீதியில் 12 தடுப்பு மத்திய நிலையங்கள்

wpengine

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்..

wpengine

அமெரிக்க அலுவலக பிரதானியாக ரோஹினி

wpengine