உள்நாட்டு செய்திகள்

ஹபரனை சம்பவத்தினை விசாரிக்க குழு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹபரனை பகுதியில் ஏற்பட்ட முறுகல் நிலைமை தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிகைகளை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் சிரேஸ்ட மேஜர் ஜெனரல்கள் இருவர் அடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ சேவையில் இருக்கும் சிரேஸ்ட அதிகாரி ஒருவருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிலருக்கும் இடையில் கடந்த ஜூன் 25 ஆம் திகதி ஹபரனை பகுதியில் ஏற்பட்ட முறுகல் நிலைமை வலுவடைந்ததன் காரணமாக அது தொடர்பிலான உண்மையான விடயங்களை அறிவதற்கான விசாரணைகளை நடத்துவதற்காக, உரிய பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு முறைபாடு ஒன்று செய்யப்பட்டுள்ளமையாலும் அது தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிகைகளுக்காக குறித்த விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மதுபானம் மற்றும் மதுபான உற்பத்தி மீது மற்றுமொரு வரி…

wpengine

அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு விடுத்த கோரிக்கை தொடர்பில் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடுவேன் – ஹகீம்

wpengine

தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம்

wpengine