மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மத்திய மாகாண முதலமைச்சர் ஆகியோரின் பணிப்புரைக்கமைய ஹட்டன் கல்வி வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடங்களின் திறப்பு விழாக்கள் மறு அறிவித்தல் வரை பிற்போடுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ்.ரி.இராஜசேகர் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது இவ்வாறு மறு அறிவித்தல் வரை ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள ஐந்து தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கும் இரண்டு சிங்கள மொழி மூலப் பாடசாலைகளுக்குமே இவ்வாறு புதிதாக தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையினிலே இவ்வாறு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.