உலக செய்திகள்

ஹஜ் வணக்கத்திற்காக சென்ற ஹஜ் யாத்திரிகர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தீ



சவுதி அரேபியா, மக்கா நகருக்கு ஹஜ் வணக்கத்திற்காக வந்திருந்த மக்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றில் நேற்று(21) தீ சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த ஹோட்டலில் இருந்த 600க்கும் மேற்பட்ட யாத்திரிகர்களை சவூதி தீயணைப்புப் படை பாதுகாப்பான முறையில் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹஜ் கிரியைகளுக்காக எமன் மற்றும் துருக்கி நாட்டிலிருந்து வந்தவர்களே குறித்த கட்டடத்தில் தங்கி இருந்ததாகவும் எந்தவித காயங்களும் இன்றி அனைவருக்கும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் மக்கா நகரின் சிவில் பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் மேஜர் ரயீத் நயீப் அல் ஷரீப் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் மக்கா நகரிற்கு அருகாமையிலுள்ள அஸீஸியா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் குளிரூட்டி இயந்திர அறையில் ஏற்பட்ட தீ காரணமாக அங்கிருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு தீ முழுமையாக அணைக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அனைவரும் ஹோட்டலுக்கு அனுமதிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

(rizmira)

Related posts

இன்று 06 மணி நேரம் மூடப்படவுள்ள விமான நிலையம்…

wpengine

ஒபாமா கியூபா செல்லவுள்ளார்

wpengine

தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்

wpengine