Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஹக்கலை விபத்தில் மூவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | நுவரெலியா) – நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் பலியானதாகவும், ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

நுவரெலியாவிலிருந்து எல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முன்னால் பயணித்த கனரக வாகனம் ஒன்றின் தடுப்புத் தொகுதி செயற்படாமல் போனதால், முச்சக்கரவண்டியின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நுவரெலியா பொலிசார் தொிவித்துள்ளனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அதன் சாரதி காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Related posts

இந்து சமுத்திர மாநாட்டிற்காக பிரதமர் சிங்கப்பூர் விஜயம்..

wpengine

ஜனாதிபதி மன்னிப்பு சர்ச்சை: கைதி நீதிமன்றத்தில் எதிர்பாராத தோற்றம்

Azeem Kilabdeen

உதய கம்மன்பில ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

wpengine