ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

‘ஸ்வர்ணவாஹினி’ தொலைக்காட்சியின் நேரலைகள் நிறுத்தம்.. – ஊழியர்கள் 15 பேர் நீக்கம்…

(FASTNEWS | COLOMBO)- இன்று(19) காலை முதல் தனியார் தொலைக்காட்சியான ‘ஸ்வர்ணவாஹினி’ தொலைக்காட்சி அலைவரிசையின் ஒளிபரப்புக்கள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அது, நேற்று(18) குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் 15 பேரினை வேலையினை விட்டும் நீக்கிய சம்பவம் தொடர்பிலேயே ஆகும். குறித்த நபர்கள் இன்று சேவைக்கு வந்திருந்த நிலையில் குறித்த நிறுவனத்தின் மேலதிகாரியினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

நிறுவனத்தினுள் உள்ள ஊழியர்களது பிரச்சினைகளை தீர்க்க தொழிற்சங்கம் ஒன்றினை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தில் சுமார் 300 ஊழியர்கள் உள்ள நிலையில் குறித்த சங்கத்தில் 270 ஊழியர்கள் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வரலாற்றில் முதன்முறையாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மகப்பேற்று அறுவை சிகிச்சை அறையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுரம்!

wpengine

மஹிந்த பதவியேற்க.. பிரதமர் செயலாளர் கீழே விழுந்தாரா.. கெட்ட சகுனமா..

wpengine

ஜப்பானில் கோத்தபாய, பின்னணி என்ன?

wpengine