கேளிக்கை

ஸ்ருதிஹாசன் இடத்தை பிடித்த திஷா பதானி…



ஸ்ருதிஹாசனுக்கு நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் எம்.எஸ்.தோனி படத்தின் நாயகி திஷா பதானி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

சுந்தர்.சி இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாக இருக்கும் படம் ‘சங்கமித்ரா’. இதில் ஜெயம் ரவி, ஆர்யா கதாநாயகன்களாகவும், ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, ஸ்ருதிஹாசன் இப்படத்திலிருந்து விலகினார்.

ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்த முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் நடித்த திஷா பதானி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள், ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரங்குகள், கிராபிக்ஸ் காட்சிகள் வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் தற்போது கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. டிசம்பர் மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ள இப்படத்தை, பெரும் பொருட்செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Related posts

முன்னணி இயக்குநருடன் கைகோர்கிறார் விக்ரம்..

wpengine

2019 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்கள் பட்டியல் இதோ [PHOTOS]

wpengine

உலகின் இரண்டாவது மிக ஆழமான கடல் பள்ளம் மெக்சிகோவில் கண்டுபிடிப்பு!

News Editor