உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கா சு.கட்சியிலிருந்து 18 பேர் அரசிலிருந்து விலகுவது குறித்து ஆராய இன்று ஜனாதிபதி தலைமையில் கூட்டம்..



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(12) அவசர கலந்துரையாடல் ஒன்றுக்காக அழைத்துள்ளார்.

குறித்த கலந்துரையாடல் இன்று(12) இரவு 8.00 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெறவுள்ளது.

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் அரசாங்கத்திலிருந்து விலகவுள்ளதாக வெளியான செய்திகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் மேலும் கட்சி வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றது.

 

(rizmira)

Related posts

குவைட்டுக்கு பணிபுரியச் சென்ற பணியாளர்கள் 41 பேர் நாடு திரும்பினர்

wpengine

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine

மழையுடனான காலநிலை காரணமாக கடும் வாகன நெரிசல்

wpengine