உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சியின் 65ஆவது மாநாட்டின் போது ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றம்..


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாட்டின் போது ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஆதரவாளர்களை பாதுகாப்பதற்காக நேர்மையாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புகளுக்காக கௌரவம் செலுத்த வேண்டும் என்பது முதலாவது தீர்மானமாகும்.

இரண்டாவது தீர்மானம், அரச சொத்துக்களை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தல் மற்றும் நட்டமடையும் நிறுவனங்களை மீளமைத்தல் உள்ளிட்ட யோசனைகள் அடங்கியதாகும்.

மேலும், இடதுசாரி முற்போக்கு சக்திகளை ஒன்று திரட்டுதல் மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்தல் தொடர்பான தீர்மானமும், இனங்களுக்கிடையே ஐக்கியம், நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான தீர்மானம்.

கடந்த ஒன்றரை வருட காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சரியான ஆட்சியை பாராட்டுவது தொடர்பில் ஒரு தீர்மானமும், வறுமை ஒழி ப்பு தொடர்பான தீர்மானமும் சர்வதேச வெற்றிகளுக்காக பாராட்டு தெரிவிக்கும் தீர்மானமும் இதன்போது நிறைவேற்றப்பட்டன.

இதனையடுத்து சுதந்திரக் கட்சியின் நினைவு மலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டதோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் mobile app உம் ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

Related posts

குண்டுவெடிப்பு மயிரிழையில் உயிர்தப்பிய பிரபல நடிகை ராதிகா…

wpengine

தேசபந்து மீதான தாக்குதல்: இஸ்மத் மெளலவிக்கு பிணை!

wpengine

அவன்கார்ட் சர்ச்சைக்கு விஷேட அமைச்சரவை

wpengine