உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சிக்கும், ஐ.தே.கட்சிக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்…



நல்லாட்சியின் எஞ்சியுள்ள 18 மாதங்களையும் முன்கொண்டு செல்வதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்துக்கு எஞ்சியிருக்கும் காலத்தை பொதுவான வேலைத்திட்டமொன்றின் அடிப்படையில் இணைந்து செயற்படுவது தொடர்பில் முடிவொன்றை எடுப்பதற்கு குறித்த இரு கட்சிகளையும் சேர்ந்த அமைச்சரவை குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி கூடவிருக்கும் பாராளுமன்ற அமர்வில் குறித்த புதிய வேலைத் திட்டம் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

####

Related posts

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில்

wpengine

பங்குச்சந்தை நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை(06) முதல் வழமைக்கு..

wpengine