உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(18) நடைபெறவுள்ளது.

இன்று மாலை 6.00 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இக்குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமித்தல், கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ள எடுத்துள்ள தீர்மானம், அவ்வாறு அமர்வதனால் ஏற்படக்கூடிய அரசியல் ரீதியான நிலைமைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் பேசப்படவுள்ளது.

மேலும் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

(riz)

 

 

 

 

Related posts

இன்று(30) 09 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு…

wpengine

சைட்டம் குறித்த விவகாரம் விசேட குழுவினால் திட்ட வரைபு பூர்த்தி…

wpengine

பல மாகாணங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை…

wpengine