உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மத்திய செயற் குழுவின் அவசர கூட்டம் இன்று



ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மத்திய செயற் குழுவின் அவசர கூட்டமொன்று இன்று(02) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

இதில் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகம், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு நேற்று அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இன்னும், கட்சியின் அமைப்பாளர்கள் பலரை நீக்கி புதிய அமைப்பாளர்களை நியமிப்பது மற்றும் உத்தேச அரசியல் அமைப்பு சபையை நியமிப்பது தொடர்பான யோசனை சம்பந்தமாக இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனோடு சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பாகவும் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

Related posts

DIG நாலக டி சில்வா அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு…

wpengine

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு

wpengine

இரு பயணிகள் உயிரிழப்பு; கட்டுநாயக்கவில் தரையிரக்கம்

wpengine