உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முக்கியஸ்தர்கள் ஐவர் ஐ.தே.கட்சிக்கு தாவுகிறது



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து முக்கிய உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

எஸ்.பி. நாவீன்ன, சாந்த பண்டார, செஹான் சேமசிங்க, எம்.கே.டி.எஸ். குணவர்தன மற்றும் அருந்திக்க பெர்னாண்டோ ஆகியோரே இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுவது குறித்து கட்சியின் சில முக்கிய உறுப்பினர்களுடன் இவர்கள் ஐவரும் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

இந்த ஐந்து உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள எடுக்கும் முயற்சிக்கும் மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்கியதற்கும் இடையில் தொடர்பு கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுக்களில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

(riz)

 

Related posts

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் அதிகரிப்பு

wpengine

இன்றும் 582 பேர் பூரணமாக குணம்

wpengine

தன்னையும் பலி வாங்க துடிக்கிறது அரசு – பிரசன்ன

wpengine