உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்ப இரு குழுக்கள் நியமனம்…


ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(16) நடைபெற்றது.

இதன்போது, எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியதுடன், கடந்த காலத் தேர்தலின் போதான விடயதானங்கள் மற்றும் குறைகளை எதிர்காலத்தில் நிவர்த்திப்பதற்காக இரு குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்களுக்கான பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

ஒரு குழுவுக்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைவராகவும் மற்றைய குழுவுக்கு தயாசிறி ஜயசேகர தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியினை தோற்கடித்து இலங்கை 215 ஓட்டங்களால் வெற்றி…

wpengine

நான் தோல்வியடைந்ததாக உணர்கிறேன்! ரணில் விக்ரமசிங்க

wpengine

இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகுவதற்கான கால அவகாசம்…

wpengine