ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஷாருக்கானை முந்திய கோஹ்லி…



கடந்த ஆண்டு விலை மதிப்புமிக்க பிரபலமானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஷாருக்கானை இந்திய கிரிக்கெட் அணியின் கெப்டன் விராட் கோஹ்லி முந்தியுள்ளார்.

இந்தியாவின் மிகவும் விலை மதிப்பு மிக்க பிரபலமானவர்கள் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. பன்னாட்டு மதிப்பு மற்றும் விளம்பரம் மூலம் அவர் சம்பாதிக்கும் பணம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்த பட்டியல் வெளியிடப்படும்.

2017-ம் ஆண்டுக்கான விலை மதிப்புமிக்க பிரபலமானவர்கள் பட்டியலில் விராட் கோஹ்லி முதலிடத்தை பிடித்தார். அவர் பாலிவுட் பிரபலம் ஷாருக்கானை முந்தினார்.

விராட் கோலியின் விலை மதிப்பு இந்த ஆண்டில் ரூ.923 கோடியாகும். கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) அவரது ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது.

இதனால்தான் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஷாருக்கானை அவர் இந்த ஆண்டில் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறார். 2016-ம் ஆண்டு விலை மதிப்பில் கோலி 2-வது இடத்தில் இருந்தார்.

விலை மதிப்பு பிரபலமானவர்கள் பட்டியலில் ஷாருக்கான் 2-வது இடத்தில் உள்ளார். அவரது மதிப்பு ரூ.679 கோடியாகும்.

நடிகை தீபிகா படுகோனே (ரூ.595 கோடி) 3-வது இடத்திலும், அக்‌ஷய் குமார் (ரூ.301 கோடி) 4-வது இடத்திலும், ரன்விர்சிங் (ரூ.269 கோடி) 5-வது இடத்திலும், சல்மான்கான் (ரூ.250 கோடி) 6-வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் விலை மதிப்பு ரூ.134 கோடியாகும். 2014-ம் ஆண்டில் தான் அவரது மதிப்பு அதிகபட்சம் ரூ.460 கோடியாக இருந்தது.

Related posts

சங்காவை தலையில் தூக்கி ஆடுகின்றனர் – ஹதுருசிங்கவுக்கு செய்தது நம்பிக்கை துரோகம்

wpengine

தீபிகாவுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்…

wpengine

இளைய தள­பதி விஜய், சமந்தா, எமி ஜக்ஸன் நடித்த “தெறி” படம் வசூலில் புதிய சாதனை படைத்­துள்­ளது

wpengine