வாழ்க்கை

ஷாம்புவில் கொஞ்சம் உப்பு கலந்து பயன்படுத்தினால் ஏற்படும் மாற்றம்…



உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கொஞ்சமாய் பயன்படுத்த வேண்டுமென்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் அழகிற்கு அப்படி அவசியமில்லை. காரணம் சருமத்திற்கும் சரி, அழகிற்கும் சரி பலவித அற்புதங்களை தருகிறது. பொடுகினை முற்றிலும் தடுக்கவும், கிருமிகளின் தொற்றை நீக்கவும் உப்பு முக்கியமாக பயன்படுகிறது. அதுபோல் சருமத்திற்கும் பலவித நன்மைகளை தருகிறது. முகப்பருக்களையும் கருமையையும் போக்க உப்பு உதவுகிறது.

எண்ணெய் சருமத்தினை உப்பு கட்டுப்படுத்தும். அதோடு காயங்கள், சூட்டு காயங்களுக்கும் மருந்தாக உப்பு பயன்படுத்தும். உப்பை தனியாக பயன்படுத்துவதை விட அதனுடன் மற்ற அழகுக் பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் விரைவில் பலன் தரும். நீங்கள் அதிக நேரம் செலவிட வேண்டாம். நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்புவுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பயன்படுத்தினால் உங்கள் கூந்தலுக்கு என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

முடி வளர்ச்சிக்கு :
முடி வளர்ச்சியை உப்பு தூண்டுகிறது. முடி உதிர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது வரபிரசாதம். உப்பு சிறிதை ஷாம்புவுடன் கலந்து பயன்படுத்திப் பாருங்கள். முடி வேகமாய் வளர்வது தூண்டப்படும். முடி உதிர்வு கட்டுப்படுத்துகிறது.

பொடுகு :
பொடுகுத் தொல்லை அறவே நீங்கி விடும். உப்பு ஒரு கிருமி நாசினி. ஆகவே பொடுகிற்கு காரணமான கிருமிகளை அழிக்கிறது. பொடுகு காரணமாக உண்டாகும் முடி உதிர்வு, அரிப்பு போன்றவற்றிற்கும் நல்ல தீர்வு காணலாம்.

மென்மையான சருமம் :
சருமம் சிலருக்கு தடிப்பாகவும் , மேடுபள்ளமாகவும் இருக்கும். அவர்கள் உப்பு பயன்படுத்தும்போது சருமம் மென்மையாகிறது. ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் சருமம் மென்மையாகும்.

முகப்பருக்கள் நீங்க :
எலுமிச்சை சாறு, தயிர் இர்ண்டையும் தலா 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் அரை ஸ்பூன் அளவு உப்பு கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த குறிப்பை தவறாமல் செய்தால் முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாது. மென்மையாக முகம் மாறும்.

வீங்கிய கண்களுக்கு :
சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் சில சமயம் கண்களுக்கு அடியில் வீங்கிக் கொள்ளும். இதனால் வயதான தோற்றம் கிடைக்கும். இதனை தவிர்க்க, உப்பை சிறிது நீரில் கரைத்து, அந்த உப்புக் கரைசலை கண்களுக்கு அடியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் சில நாட்களில் பழையபடி கண்களின் தோற்றத்தை பெறுவீர்கள்.

Related posts

முகத்திற்கு புத்துணர்ச்சியைத் தரும் புளி..

wpengine

Hair dryer கருவியை பயன்படுத்தும் போது நாம் செய்யும் தவறுகள்…

wpengine

பற்களுக்கு பின்னால் உள்ள அசிங்கமான கரைகளை எளிதில் போக்க…

wpengine