உள்நாட்டு செய்திகள்

ஷானி அபேசேகர விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேக ரகம்பஹா நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வெலிவேரிய பகுதி ஆயுத கிடங்கு விவகார விசாரணைகளில், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு உண்மைக்கு புறம்பான சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் ஷானி அபேசேகர இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

அக்குறணை நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் நடமாடும் சேவை…

wpengine

முன்னணியில் அமைச்சுப் பதவிகள் கிடைக்கப்போவோரின் பெயர் விபரங்கள்

wpengine

சில பகுதிகளில் 18 மணி நேரம் நீர் வெட்டு

Azeem Kilabdeen