உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீ.சு.கட்சி புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார்..



ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் அதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நாராஹேன்பிட்ட, அபயராம விசாரையில் நேற்று(15) இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இந்த அரசாங்கம் தொடர்ந்து இருக்கும் என்று ஐக்கிய தேசிய கட்சி கூறுவது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவிய போது,

“..ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டு தரப்பினரும் இதனையே கூறுகின்றனர். எனினும் இறுதி முடிவு இருப்பது ஜனாதிபதியின் கையில். அடுத்த முடிவு இருப்பது எமது கையில். முதலில் ஜனாதிபதி முடிவெடுக்கட்டும். அடுத்து நாங்கள் எடுப்போம். அதேநேரம் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுமானால் அமைச்சரவையை கண்டிப்பாக 30 பேர் வரை வரையறுக்க வேண்டும்..” என மஹிந்த தெரிவித்திருந்தார்.

#rishma

Related posts

மஹிந்தாநந்தவிற்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணை 6 ஆம் திகதி ஆரம்பம்…

wpengine

புதிய ஜனாதிபதி நாளை காலை பதவி பிரமாணம்

wpengine

ஹெரோயின் பக்கட்டுக்கள் 22 உடன் யுவதி ஒருவர் கைது..

wpengine