உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் முதலீட்டில் கைகோர்க்கிறது அமெரிக்கா…



ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் மற்றும் மிஹின் லங்கா நிறுவனம் என்பவற்றை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுத்துச் செல்வதற்காக சுமார் 10 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

அவற்றுள் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் முதலீடு செய்ய இறுதியாக தெரிவு செய்யப்பட்ட இரு நிறுவனங்களில் TPG என்ற அமெரிக்க நிறுவனம் தகுதியானது என அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இதில் இறுதியாக இலங்கையுடன் தொடர்புபட்ட பி.எஸ். எயார் நிறுவனம், மாலைத்தீவின் Super Group நிறுவனம், அமெரிக்காவின் TPG நிறுவனம் ஆகியன தெரிவாகியிருந்தன.

இவற்றிலிருந்தே TPG என்ற அமெரிக்க நிறுவனம் தகுதியானது என பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சபாநாயகர் மஹிந்த யாப்பா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

wpengine

ஊழல் ஒழிப்பு செயலகத்தில் நான்கு சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு…

wpengine

நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அரசு தீர்மானம்?

wpengine