கேளிக்கை

வைரலாகும் லட்சுமி மேனன் காதல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய லட்சுமி மேனன், தான் single இல்லை என கூறியுள்ளார்.

சுந்தரபாண்டியன் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான லட்சுமி மேனன் கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

லட்சுமி மேனன் நடிப்பிற்கு சில ஆண்டுகள் முழுக்கு போட்டார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி மேனன், அண்மையில் ரசிகர்களுடன் கேள்வி பதில் பகுதியாக கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் சிங்கிளா? என கேள்வி எழுப்பினார். அதற்கு இல்லை என லட்சுமி மேனன் பதிலளித்தார்.

அதே போல, திருமணத்தை பற்றி என்ன நினைக்கிறீங்க? என மற்றொரு ரசிகர் கேட்க, அது ஒரு மிகைப்படுத்தப்பட்டது என்று அவர் பதிலளித்துள்ளார். தற்போது நடிகை லட்சுமிமேனன் தான் சிங்கிளாக இல்லை என கூறி இருப்பதால், அவரது காதலர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Related posts

‘Raising Trump’ எனும் புத்தகத்தை வெளியிட்டார் டிரம்ப் இன் முன்னாள் மனைவி Ivana Trump…

wpengine

கௌரிக்கு கொரோனா தொற்று

wpengine

தளபதிக்கே சவால் விட்ட மகேஷ் பாபு – செய்து காட்டினார் விஜய்

wpengine