உள்நாட்டு செய்திகள்

பட்டதாரிகளின் போராட்டம் இன்றும் தொடர்கின்றது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வேலையற்ற பட்டதாரிகளின் சங்கம் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் சங்கம் ஆகியன ஆரம்பித்த போராட்டம் இன்று(24) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

அரச தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை முன்வைத்து வேலையற்ற பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் தமக்கு புதிய வேலைகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும் புதிய அரசாங்கத்தின் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களின் நியமனங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Related posts

இன்று எரிபொருள் விலையில் திருத்தம்?

News Editor

நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல்

wpengine

சஹ்ரானுக்கு அடைக்கலம் வழங்கியவர் கைது

wpengine