உள்நாட்டு செய்திகள்

வேலைநிறுத்தத்தில்  குதித்துள்ள மருத்துவர்கள் அதை கைவிடத் தீர்மானம்


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அமைச்சர் சாகல ரத்னாயக்கவுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களது கோரிக்கைகளை முன்வைத்து அதற்கான தீர்மானங்களை விரைவில் அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். கோரிக்கைகளில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை(SAITM) மூடுவது முக்கியமானதாகும்.
இப்பேச்சுவார்த்தையை தொடர்ந்து இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைநிறுத்தத்தை கைவிட்டு இன்று மாலை 4 மணியிலிருந்து  வேலைக்குத்திரும்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்வரும் இரண்டு தினங்களில் கடும் காற்று…

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Azeem Kilabdeen

மேலும் 3 பேர் பூரண குணம்

wpengine