உள்நாட்டு செய்திகள்

வேலைநிறுத்தத்திலுள்ள பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் நாளை முதல் கடமைக்குத் திரும்ப வேண்டுமென அரசு சிவப்பு சமிஞ்சை.



வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று முதல் கடமைக்குத் திரும்ப வேண்டும் என, அரசாங்கம் தெரியப்படுத்தியும் அதற்கான எவ்வித முன்னேற்றங்களும் தெரியவில்லை.

ஆதலால், நாளை கடமைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கியவர்களாக கருதப்படுவார்கள் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கையெழுத்துடன் வௌியாகியுள்ள அறிக்கையிலேயே மேற்குறித்த விடயம் கூறப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளால் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தடுக்க முடியாது என, பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒன்றிணைந்த குழு ஊடகப் பேச்சாளர் கே.எல்.டீ.ஜீ.ரிஜ்மன்ட் தெரிவித்துள்ளார்.

Related posts

சந்திரிக்கா, மஹிந்த மற்றும் மைத்திரி தலைமையில் அணிதிரள்வோம் – துமிந்த

wpengine

எதிர்வரும் 07 ஆம் திகதியுடன் முறைப்பாடுகளை ஏற்கும் பணி நிறைவு…

wpengine

நிச்சயம் மாற்றம் ஒன்று ஏற்படும் – டில்வின் சில்வா

wpengine