கேளிக்கை

`வேலைக்காரன்’ படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்…



மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் `வேலைக்காரன்’ படக்குழு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் சமூக பிரச்சினையை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஷில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ள நிலையில், படத்தின் இசைவெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது. இசை வெளியீட்டு விழா குறித்த முக்கிய அறிவிப்பு இன்று(24) மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று வேலைக்காரன் படக்குழு அறிவித்துள்ளது.

அனிருத் இசையில் ஏற்கனவே கருத்தவென்லாம் கலீஜாம் மற்றும் இறைவா உள்ளிட்ட இரு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு எதிர்வரும் டிசம்பர் 22-ல் வெளியாக இருக்கிறது.

Related posts

Video call மூலம் ஏ.ஆர்.ரஹ்மானின் எரிச்சலை மாற்றிய குழந்தை…

wpengine

ஏமி ஜாக்சன் மீண்டும் புரளியில்… (PHOTOS)

wpengine

சந்திமால் மற்றும் விஷ்வ அரசியலில்…

wpengine